Tamilnadu
’விடியல் வந்துவிட்டது’ : அ.தி.மு.க ஆட்சியில் மறுக்கப்பட்ட உரிமை- தி.மு.க ஆட்சியில் நிறைவேறிய அற்புதம்!
ஆரணி அருகே கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சுதந்திர தினத்தில் தேசியக் கொடி ஏற்றவிடாமல் பெண் ஊராட்சி மன்ற தலைவரை தடுத்துவந்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் பெண் ஊராட்சி மன்ற தலைவர் தேசியக்கொடி ஏற்றினார்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் சொந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக ஷர்மிளா தரணி உள்ளார். இவரைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் தேசியக் கொடியை ஏற்றவிடாமல் சேவூர் ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள் தடுத்துவந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா தரணி தேசியக்கொடி ஏற்றினார்.
இது குறித்து ஷர்மிளா தரணி கூறுகையில்," அ.தி.மு.க ஆட்சியில் கடந்த இரண்டு வருடங்களாகத் தேசியக்கொடி ஏற்றவிடாமல் தடுத்தனர். இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வந்தவுடன், விடிவுகாலம் வந்துவிட்டது. தி.மு.க ஆட்சி வந்ததால் இந்த ஆண்டு மகிழ்ச்சியாக நான் தேசியக்கொடி ஏற்றினேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !