Tamilnadu
“சேவல் சண்டையால் ஏற்பட்ட விபரீதம்” - வாலிபர் குத்தி கொலை: கிருஷ்ணகிரியில் நடந்த பயங்கரம்!
கிருஷ்ணகிரி மாவட்டம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அகமத். இவரது மக்கள் இம்ரான். இவர் சண்டைக்கோழிகள் வாங்கி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் மார்கோ என்பவரிடம் சண்டைக்கோழி ஒன்றை வாங்கியுள்ளார்.
பின்னர், ஆந்திராவில் நடைபெற்ற கோழி சண்டை போட்டியில் மார்கோவிடம் வாங்கிய கோழியுடன் இம்ரான் கலந்து கொண்டுள்ளார். போட்டியில் கோழி சரியாக சண்டைப் போடவில்லை. இதனால் மார்கோவிடம் உங்கள் கோழி சரியாகச் சண்டை போடவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மார்கோ மற்றும் அரவது மகன் குல்பி ஆகியோர் இம்ரானையும், அவரது தந்தை சகோதரர் சலாவுதீனையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து இவரும் தப்பிச்சென்றுள்ளனர்.
பிறகு இரத்த வெள்ளத்திலிருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இம்ரான் இறந்துவிட்டார். சலாவுதீன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர். மேலும் தலைமறைவாகியுள்ள மார்கோவும், குல்பியும் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இவர்களைப் பிடிக்க போலிஸார் தீவிரம் காட்டியுள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!