Tamilnadu
“10 நாட்களில் கம்பீரமாக எழுந்த ‘சுதந்திர தின வைரவிழா நினைவுத் தூண்’ : இதன் சிறப்பம்சங்கள் என்ன?
இந்தியாவில் 75வது சுதந்திர தினம் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றிவைத்தார். பின்னர், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, காமராஜர் சாலை- சுவாமி சிவானந்தா சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள 75ம் ஆண்டு சுதந்திர தின நினைவுத் தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
முதலமைச்சர் திறந்துவைத்த இந்த நினைவுத் தூணின் சிறப்பு அம்சங்கள் என்னவென்றால், இந்த நினைவுத் தூண் சுமார் 59 அடி உயரம் கொண்டது. தூணின் உச்சியில் கம்பீரமாக நான்கு சிங்கங்கள் கொண்ட அசோக சக்கரம் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவுத்தூண் துருப்பிடிக்காத வகையில் ரூ.195 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தே நாட்களில் இந்த தூண் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், எல்லையைப் பாதுகாக்கும் ராணுவத்தினரைப் போற்றும் வகையில், நான்கு ராணுவ வீரர்களின் சிலைகள் தூணைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தனது சுதந்திர தின உரையில் இந்த நினைவுத் தூண் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”75ஆவது சுதந்திர நாளை நினைவுகூரும் வகையில் மிகப்பெரிய தூணை இன்று உருவாக்கி இருக்கிறோம். அது வெறும் கல்லாலும் சிமெண்டாலும் செங்கல்லாலும் கட்டப்பட்டது அல்ல.
நம்முடைய விடுதலைப் போராட்ட வீரர்களின் இரத்தத்தால், எலும்பால், சதையால் உருவாக்கப்பட்டதுதான் அந்தத் தூண் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விடுதலைக்காகப் போராடிய மண்தான் நம்முடைய தமிழ் மண்.
பூலித்தேவர், வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், தளபதி சுந்தரலிங்கம், ஊமைத்துரை, தீரன் சின்னமலை, சின்ன மருது, பெரிய மருது, வ.உ.சி., மகாகவி பாரதி, சுப்பிரமணிய சிவா, டி.எஸ்.எஸ். ராஜன், தில்லையாடி வள்ளியம்மை, தந்தை பெரியார், திரு.வி.க., நாமக்கல், ராமலிங்கம், ம.வெ.சிங்காரவேலர்,
பாரதிதாசன்,பசும்பொன் முத்துராமலிங்க தேவர்,திருப்பூர் குமரன், ராஜாஜி,காமராசர், ஏ.எம். ஈஸ்வரன், ஓமந்தூர் ராமசாமி, ஜீவா, கேப்டன் லட்சுமி, ம.பொ.சிவஞானம், கே.பி. சுந்தராம்பாள். இத்தகைய தமிழ்நாட்டுத் தியாகிகளின் மூச்சுக்காற்றைக் கொண்டு கட்டப்பட்டதுதான் இந்த நினைவுத் தூண்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!