Tamilnadu
"செப்.1 முதல் பள்ளிகளைத் திறக்க அரசு தயார்" : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி!
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், உயரதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படாமல் உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையுடன் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனால், 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை தயார் நிலையில் உள்ளது. மேலும் 14 மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே தமிழ்நாட்டிலும் பள்ளிகள் திறப்பது குறித்தான வழிகாட்டு நெறிமுறைகள் ஒருசில தினங்களில் வெளியிடப்படும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தங்களுடன் வேலைக்கு அழைத்துச் செல்வது, வேலைக்கு அனுப்புவது குறித்துத் தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் பள்ளிகளிலிருந்து 2 லட்சத்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இவர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையும் பள்ளிக் கல்வித்துறை எடுத்து வருகிறது" எனத் தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!