Tamilnadu
"மின்னல்வேக வளர்ச்சி.. ரூ.100 கோடி வருவாய் ஈட்டிய எஸ்.பி.வேலுமணியின் நிறுவனங்கள்": ரெய்டின் பின்னணி என்ன?
அ.தி.மு.க ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவருக்குச் சொந்தமான 52 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல், அரசு ஒப்பந்தங்களைத் தனது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான, ஆலம் கோல் அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் தொடங்கி ஒரே வருடத்தில் 100 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல் constromall goods pvt ltd நிறுவனம் 2018-19 நிதியாண்டில் 0.84 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது. அதற்கு அடுத்த வருடமான 2019-2020 நிதியாண்டில் 3.14 கோடி ரூபாய் வருவாய் உயர்ந்துள்ளது.
அதேபோல், constronics india என்ற நிறுவனம் 2015-2016 நிதியாண்டில் 0.86 கோடி ரூபாய் ஈட்டி உள்ளது. ஆனால் 2017-18ம் நிதியாண்டில் இந்நிறுவனம் 42.11 கோடியாக வருவாய் உயர்ந்துள்ளது. இதேபோல் ஓசூர் பில்டர்ஸ் நிறுவனம் 2015-2016 நிதியாண்டில் 0.93 கோடி ரூபாய் ஈட்டி உள்ளது. ஆனால் 2017-18ம் நிதியாண்டில் இந்நிறுவனம் 19.61 கோடியாக வருவாய் உயர்ந்துள்ளது.
மேலும், 2012ல் 42 கோடிக்கு ரூபாய்க்கு வர்த்தகம் செய்துவந்த கே.சி.பி என்ஜினியர்ஸ் நிறுவனம் 2018ம் ஆண்டு தனது வருவாயை 453 கோடியாக உயர்த்தியுள்ளது. ஏ.சி.இ டெக் மெஷினரி நிறுவனமும் 2018ம் ஆண்டு 155 கோடிக்கு ரூபாய்க்கு தனது வர்த்தகத்தை அதிகரித்துள்ளது.
இப்படி அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமாக உள்ள நிறுவனங்களில் வர்த்தக மதிப்பு ஒரே ஆண்டில் பல மடங்கு அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்தான் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!