Tamilnadu
இதுதான் வெள்ளை அறிக்கையா? அதிர்ச்சியில் EPS - OPS : அடுத்தடுத்து சிக்கப்போவது யார்?
தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை குறித்து நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கை வெளியிட்டார். இந்த வெள்ளை அறிக்கை இறுதி அறிக்கை இல்லையென்றும் ஒவ்வொரு துறை ரீதியான முறைகேடுகள், நிதி நிலைமை குறித்த அறிக்கைகளும் வரும் காலங்களில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
குறிப்பாக உள்ளாட்சி, மின்சாரம் மற்றும் போக்குவரத்து போன்ற முக்கிய துறைகளில் கடந்த அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த ஊழல்களும் முறைகேடுகளுக்கும் முறையான ஆவணங்களை ஏற்படுத்தி வைக்காமல் இருந்திருக்கிறார்கள் என அமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார்.
கடனை வாங்கி கட்டாயச் செலவு செய்யும் வகையிலேயே தமிழ்நாடு அரசின் நிதி நிலை இருக்கிறது. டாஸ்மாக்கில் மட்டுமே வருமானத்தை காட்டிய அதிமுக ஆட்சியாளர்கள் ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை கேட்டுப் பெறாததால் 33 சதவிகிதம் நிதி வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நினைத்துக்கூட பார்த்திராத வகையில் மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை உள்ளது. அரசு பேருந்து 1 கிலோமீட்டர் ஓடினால் அரசுக்கு 59 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் மின்துறையும், போக்குவரத்துத் துறையும் ரூபாய் 2 லட்சம் கோடி கடன் வைத்துள்ளது.
வாங்கிய கடன்களுக்காகத் தமிழ்நாடு அரசு ஒருநாள் வட்டியாக ரூ.87.31 கோடி செலுத்தி வருகிறது. மின்சாரத்துறையில் பல பிரச்சனைகள் உள்ளது. ஒரு யூனிட் மின்சாரத்தை வாங்கி பயன்படுத்தினால் 2.36 பைசா இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது வரியாக விதிக்கப்படும் ரூ.32ல் ரூ.31.50யை ஒன்றிய அரசே எடுத்துக் கொள்கிறது. ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை மட்டும் ரூ,20,000 கோடி நிலுவையில் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் மின்வாரியம் மற்றும் குடிநீர் வாரியத்துக்கு சுமார் ரூ.1,743 கோடி பாக்கி வைத்துள்ளன என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
இவ்வாறு அதிமுகவின் நிர்வாகத்திறனற்ற ஆட்சியின் காரணமாக தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை இந்தியாவில் வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் சரிந்துள்ளது. மேலும் மக்களுக்கு சென்று சேர வேண்டிய திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து தங்கள் கஜானாவை நிரப்பி அரசின் கஜானாவை காலி செய்திருக்கிறார்கள்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !