Tamilnadu
EPS - OPSன் கூட்டு கொள்ளையால் தனிநபர் ஒருவருக்கு ரூ.50,000 இழப்பு - புட்டு புட்டு வைத்த அமைச்சர் PTR!
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி காலத்தில் குறிப்பாக கடந்த 7 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாநில அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டுள்ளார்.
வெள்ளை அறிக்கை குறித்து அமைச்சர் பி.டி.ஆர் செய்தியாளர்களை சந்தித்து விரிவாக தெரிவித்த போது, “கடந்த ஐந்து ஆண்டுகளில் அதாவது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக் காலத்தின் போது மட்டுமே மாநில அரசின் வருவாய் பற்றாக்குறையை சரி செய்ய ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இருப்பினும் தமிழ்நாடு அரசின் மறைமுக கடன் மட்டுமே சுமார் ரூ.39 ஆயிரம் கோடி அளவிற்கு வாங்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டுமே. அது தொடர்பான எந்தவொரு விரிவான விளக்கங்களையும் அதிமுக ஆட்சியாளர்கள் கணினி முறையில் பதிவேற்றம் செய்யவில்லை.
இவ்வாறு செய்யப்பட்ட வீண் செலவுகளால் மாநிலத்தில் தனி நபர் ஒருவர் மீது ரூ.50 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோக, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீது 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் சுமை உள்ளது.
2011 - 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது மட்டுமே தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.17,000 கோடியாக இருந்தது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நினைத்துக்கூட பார்த்திராத வகையில் மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை உள்ளது.
கடனை வாங்கி கட்டாயச் செலவு செய்யும் வகையிலேயே தமிழ்நாடு அரசின் நிதி நிலை இருக்கிறது. முந்தைய அரசு வாங்கி குவித்துள்ள கடன்கள் அனைத்திற்கும் வட்டி கட்டுவதற்காகவே தனியாக கடன் வாங்கும் அளவுக்கான சூழலையே ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு 87 கோடி ரூபாய் வட்டி செலுத்தப்பட்டு வருகிறது. டாஸ்மாக்கில் மட்டுமே வருமானத்தை காட்டிய அதிமுக ஆட்சியாளர்கள் ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை கேட்டுப் பெறாததால் 33 சதவிகிதம் நிதி வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வருவாய் பற்றாக்குறை தமிழ்நாட்டில் உள்ளது. கொரோனா என்ற வார்த்தை மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு முன்பே தமிழ்நாட்டில் வருவாய் சரிவு தொடங்கிவிட்டது.”
இவ்வாறு கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!