Tamilnadu

'ஆன்லைன் வர்த்தகத்தால் அதிகரித்த கடன்... குடும்பத்தோடு விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்' : ஓசூரில் சோகம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி சுவர்ணபூமி பகுதியைச் சேர்ந்தவர் மோகன். மனைவி ரம்யா. இந்த தம்பதிக்கு அன்மயா, வசந்தம்மா என இரண்டு மகள்கள் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று வீட்டில் நான்கு பேரும் உயிரிழந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர், அங்கு வந்த போலிஸார் நான்கு பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு போலிஸார் வீட்டில் சோதனை செய்தபோது மோகன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அந்தக் கடிதத்தில், "எனக்குச் சொந்த பிரச்சனைகள் அதிகம் உள்ளது. வங்கியில் அதிக கடன் உள்ளது. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன். குடும்பத்தைத் தனியாக விட்டுச் செல்ல எனக்கு விருப்பம் இல்லை. அதனால் அவர்களை அழைத்துச் செல்கிறேன். என்னை அனைவரும் மன்னித்து விடுங்கள்" என உருக்கமாக எழுதியுள்ளார்.

மேலும், தொழில் அதிபரான மோகன் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததால் அதில் வருமானம் கிடைக்காமல் அதிக கடன் சுமை ஏற்பட்டுள்ளதால் தற்கொலை செய்துகொண்டதாக போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: ₹6.50 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை: சினிமா பாணியில் கண்டெய்னர் லாரி கடத்தல் - மர்மகும்பல் துணிகரம்!