Tamilnadu
பேனர் விவகாரம்: நடுரோட்டில் ரகளை.. அதிகாரியை தாக்கி கொலை மிரட்டல் - பா.ஜ.க நிர்வாகிகள் கைது!
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிடக்கோரி பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியினர் நேற்று தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகே காலை முதல் மாலை வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு போலிஸார் அனுமதி மறுத்த நிலையில் தடை உத்தரவை மீறி அக்கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத நிகழ்ச்சி தொடர்பாக அக்கட்சியினர் தஞ்சாவூர் எலிஸா நகர் அருகே சாலையில் உரிய அனுமதியின்றி ஃப்ளக்ஸ் பேனர் வைத்திருந்தனர்.
இதுபற்றி தகவலறிந்த மாநகராட்சி ஊழியர்கள், மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் தலைமையில் அங்கு வந்து அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் பேனரை அகற்றினர். அப்போது உண்ணாவிரத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூரிலிருந்து ஒரு வேனில் அவ்வழியே வந்து கொண்டிருந்த பா.ஜ.கவினர் மாநகராட்சி ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை மாவட்ட பா.ஜ.க தலைவர் பண்ணைவயல் ஆர்.இளங்கோ உள்ளிட்ட பா.ஜ.கவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நகரமைப்பு அலுவலர் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் அளித்த புகாரின் பேரில், போலிஸார் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து லால்குடியைச் சேர்ந்த தெற்கு மண்டலத் தலைவர் அசோக்குமார் (44), அறந்தாங்கி நகர செயலாளர் இளங்கோவன் (33) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் பா.ஜ.க தெற்கு மாவட்ட தலைவர் பண்ணைவயல் ஆர்.இளங்கோ உள்ளிட்ட 9 பேரை தேடி வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!