Tamilnadu

“ஒரே இரவில் 40 கி.மீ நடந்து சொந்த கிராமத்திற்கு வந்த காட்டு யானை”: ரிவால்டோ யானை குறித்த சிறப்பு செய்தி !

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள வாழைத்தோட்டம், மாவனல்லா, சொக்நள்ளி உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக ரிவால்டோ என்ற காட்டுயானை சுற்றி திரிந்து வந்தது. தும்பிகையில் காயம் காரணமாககவும், வலது கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் வன பகுதிக்குள் செல்லாமல் 12 ஆண்டு காலமாக தொடர்ந்து குடியிருப்பு பகுதியிலேயே இந்த யானை சுற்றி திரிந்தது.

இது யானைக்கு தும்பிக்கையில் ஏற்பட்ட சிறு காயம் காரணமாக, சுவாசிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி நிலையில் , அந்த யானை கடந்த மே மாதம் வாழைத்தோட்டம் கிராமத்தின் அருகே கிரால் எனபடும் மரக்கூண்டில் அடைத்து, வனத்துறையில் கால்நடை மருத்துவ குழு தும்பிக்கை குணமடைய சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சை முடிந்த நிலையில், சுற்று சூழல் ஆர்வலர்கள் வன பகுதியில் விடவும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து யானையை விடுவிப்பது குறித்து முடிவு செய்ய குழு ஒன்று அமைக்கபட்டது. அந்த குழு ரிவால்டோ யானையை அடர்ந்த வனபகுதியில் விட முடிவு செய்தது.

மேலும் அதனை கண்காணிக்க அதன் கழுத்தில் ரேடியோ கலர் கருவி பொறுத்தபட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ரிவால்டோ யானை லாரியில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிக்கல்லா வன பகுதியில் 40 கி.மீட்டர் வனப்பகுதிக்குள் லாரி மூலம் கடந்து சென்று விடபட்டது. 3 மாத காலம் கிரால் கூண்டில் வைக்கபட்ட யானையை மீண்டும் வன பகுதியில் விடபட்டது.

ஆனால் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்ட, அந்த யானை 24 மணி நேரத்தில் 12 ஆண்டு காலமாக தான் வாழ்ந்து வந்த வாழைத்தோட்டம் பகுதிக்கு வந்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் இந்த யானை, யாருக்கும் எவ்விதத் தீங்கும் ஏற்படுத்தாத நிலையில், தும்பிக்கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் அதே கிராமத்திற்கு வந்துள்ளதால், வனத்துறையினர் இந்த யானையை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்கு எடுத்துச் செல்வதா அல்லது அதே பகுதியில் விடுவதா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Also Read: “தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சூழலை கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது” : முதல்வர் கடிதம்!