Tamilnadu
“கோவில் செல்லும் பொதுமக்களுக்கு கொலு பொம்மைகள் மூலம் கொரோனா விழிப்புணர்வு” : கடைக்காரரின் புது முயற்சி!
கொரோனா இரண்டாவது அலை தாக்கம் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்று தினங்களாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு கொரோனா மூன்றாவது அலை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையில் பிரச்சாரம் செய்து வருகின்றது.
இந்நிலையில், அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் இன்று கொரோனா மூன்றாவது அலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார வாகனம், குறும்படங்கள், துண்டு சீட்டுகள் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் கீழ ராஜவீதி அருகே உள்ள சாந்தாராமன் கோயில் பகுதியில், கோவில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இந்நிலையில், நாளை மறுநாள் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவதை ஒட்டி பொதுமக்கள் அதிக அளவு கடைகள் கூடி பொருட்கள் வாங்குவதை தவிர்க்கும் நோக்கிலும் அதேபோல் கோவில்களில் கூட்டம் கூட்டமாக சென்று சாமி தரிசனம் செய்வதை கட்டுப்படுத்தும் நோக்கில் கொலு பொம்மைகள் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளார்.
அந்த வகையில் தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, முகக் கவசம் அணிவது கடைக்குச் சென்றால் எவ்வாறு தனிமனித இடைவெளியை பின்பற்றி நிற்பது, கோவில் குளங்களில் எவ்வாறு செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு வகையில் பொம்மைகளை செய்து பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி மக்களை கவரும் வகையில் வாசகங்களை எழுதி வைத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
கொரோனா மூன்றாவது அலை குறித்து தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வரக்கூடிய நிலையில் கோவில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர் ஒருவர் நூதன முறையில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !