Tamilnadu
தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழை காட்டினால் ஒரு ரூபாய்க்கு காபி... இது எங்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அரசு சார்பில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான விழிப்புணர்வைத் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறது. மேலும் அரசு சார்பில் பல்வேறு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது கூட நாட்டிலேயே எங்கும் இல்லாதவகையில் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் திட்டத்தையும் தொடங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ் காட்டுபவர்களுக்கு ஒரு ரூபாய்க்குக் காபி வழங்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த கருங்குழியில் தேசிய நெடுஞ்சாலை அருகே 'மதர் காபி ஷாப்' என்ற பெயரில் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் தான் இந்த அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தக் கடையின் உரிமையாளர் முரளி, "மக்களிடம் தடுப்பூசிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இப்படிச் செய்துள்ளேன். எனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் யாராக இருந்தாலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் காண்பித்தால், அவர்களுக்கு 25 ரூபாய் மதிப்புள்ள காபியை, ஒரு ரூபாய்க்கு வழங்கி வருகிறோம்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வாகனத்தில் செல்லும் பலர் தங்களின் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களைக் காண்பித்து காபி குடித்துவிட்டுச் செல்கிறார்கள். மேலும் தடுப்பூசி செலுத்தி இருந்தால் நான்கு வாரத்திற்கு இவ்வாறு வழங்கப்படும். ஆனால் நபர் ஒருவருக்கு வாரம் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.
இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்க இருக்கிறேன். கொரோனா மூன்றாவது அலையை தடுப்பதற்காகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இவ்வாறு செய்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக!” : பிறந்தநாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் அறிக்கை!
-
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு!
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!