Tamilnadu
கமிஷனில் கல்லா கட்டிய அ.தி.மு.க: சாலைப் பராமரிப்பு டெண்டரில் முறைகேடு.. அம்பலத்துக்கு வரும் அடுத்த ஊழல் !
அ.தி.மு.க ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் பலரும் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் எழுந்து வருகிறது. அந்தவரிசையில் தற்போது முன்னாள் அமைச்சர் வேலுமணி கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூபாய் 1500 கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத். இவர் சமீபத்தில் அ.தி.மு.கவில் இருந்து விலகி தி.மு.கவில் இணைந்தார். இந்நிலையில், கோவையில் அனைத்து துறை ஒப்பந்தங்களிலும் 12 சதவீதம் கமிஷன் பெறுவதை முன்னாள் அமைச்சர் வேலுமணி வாடிக்கையாக வைத்திருந்ததாகவும், இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் சிலர் உடந்தையாகச் செயல்பட்டதாகவும் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் மனு அளித்துள்ளார் அளித்துள்ளார் ரகுநாத்.
மேலும் இது குறித்து ரகுநாத் கூறுகையில், “முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளாட்சித்துறையில் பல ஊழலைக் கண்ணுக்குத் தெரிவது போலவே வெளிப்படையாகச் செய்துள்ளார். இதில் சில சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்புள்ளது. மேலும் ரேஸ்கோர்ஸ் சாலையில் 40 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணி என கூறி, பழைய கட்டுமான பொருள்களை வைத்தே தரமற்றதாக சாலையைப் போட்டுள்ளார்.
அதேபோல், கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூபாய் 1500 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது. மேலும் குளங்களை மேம்படுத்துகிறோம் என கூறிவிட்டு, அதிகமாகக் கொள்ளையடித்திருக்கிறார்கள். நொய்யல், அத்திக்கடவு அவினாசி திட்டத்திலும் ஊழல் நடைபெற்றுள்ளது.
50 ஆண்டுகளில் இல்லாத திட்டங்களை 5 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டதாக வேலுமணி கூறுகிறார். ஆனால், 50 ஆண்டுகளில் அடிக்க வேண்டியதை 5 ஆண்டுகளில் அடித்துவிட்டனர். தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்திருக்கிறார் வேலுமணி” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கேரளாவில் ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் பலி!
-
தமிழ்நாட்டு மாணவருக்கு மெட்டா நிறுவனம் பாராட்டு : காரணம் என்ன?
-
“கருப்பி.. என் கருப்பி...” : பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நாய்க்கு தீபாவளியன்று நேர்ந்த சோகம்!
-
“தனித்துவத்தை நிலைநாட்டும் தமிழ் மொழி!” : கேரளத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
இரயில் நிலையம் To காவல் நிலையம்... 2-வது திருமணத்துக்கு ஆசைப்பட்டு போலி எஸ்.ஐ -ஆன பெண் - நடந்தது என்ன?