Tamilnadu

உஷார் மக்களே.. “இப்படி ஒரு மெசேஜ் வந்தால் நம்ப வேண்டாம்” : வங்கி பயனாளிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை!

வங்கியிலிருந்து பேசுறோம் உங்க ஏ.டி.எம் கார்டில் இருக்கும் நம்பரை சொல்லுங்கள் என கூறி பல பேரின் வங்கியில் இருந்து பணங்களை நூதன முறையில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக காவல்நிலையங்களில் வழக்குகளும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், இதேபோன்று செல்போன்களுக்கு மெசேஜ் செய்து பலரிடம் பண மோசடி செய்யப்பட்டிருப்பதை போலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இப்படி வரும் குறுஞ்செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபகாலமாக அங்கீகரிக்கப்பட்ட வங்கியிலிருந்து பலரது செல்போன் எண்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வழியே லிங் ஒன்று வந்துள்ளது. அதில், “இந்த லிங்கை 10 நிமிடத்திற்குள் அழுத்தி உங்களது ஃபேன் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்களைப் பதிவிட வேண்டும். இல்லை என்றால் உங்களது வங்கிக் கணக்கு முடக்கப்படும்” என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பதற்றமடைந்த பலரும் உடனே அந்த லிங்க் மூலமாக தங்களது விவரங்களைப் பதிவு செய்கிறார்கள். அப்போது அந்த மோசடி கும்பல் அந்த நேரத்தைப் பயன்படுத்தி ஏ.டி.எம் மற்றும் ஷாப்பிங்க மூலமாக பணத்தை நூதனமாகத் திருடி வருகிறார்கள்.

எனவே இதுபோல் வரும் குறுஞ்செய்தியை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம். வங்கியிலிருந்து ஒப்படி ஒரு குறுஞ்செய்தி அனுப்பமாட்டார்கள் என சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிஸார் எச்சரிக்கை செய்துள்ளனர்.

Also Read: சென்டர் மீடியனில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் நடிகை யாஷிகா படுகாயம்.. மற்றொரு பெண் பலி: போஸார் விசாரணை!