Tamilnadu
விஜிலன்ஸ் விசாரணை வலையில் சிக்கிய M.R.விஜயபாஸ்கர்; வங்கி லாக்கரை ஆய்வு நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு!
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்கள், வீடு, ஆதரவாளர்கள் வீடுகள் அலுவலகம் என மொத்தம் 26 இடங்களில் நேற்று காலை முதல் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையை நேற்று இரவு வரை நீடித்தது.
கரூரிலுள்ள அவரது வீடு, தொழில் நிறுவனங்கள், அவரின் சகோதரர் வீடு, நிறுவனங்கள் எனச் சுமார் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி பவானீஸ்வரி தலைமையில், 20 குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்ட நிலையில், சென்னையிலும் சோதனை நடந்துள்ளது.
Also Read: “எங்களை விமர்சிச்சா செய்தி போடுறீங்க..?” : கொரோனா அவலங்களை வெளியிட்டதால் ஐ.டி ரெய்டை ஏவிய மோடி அரசு!
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது பணிக்காலத்தில் அவரது பெயர், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது தம்பி சேகர் பெயரிலும், விஜயபாஸ்கர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடந்த சோதனையில், ரூ.25.56 லட்சம் ரொக்கப்பணம், சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள வங்கி லாக்கர்கள் ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறையினர் முடிவு செய்து உள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விஜயபாஸ்கருக்கு சம்மன் அளித்து நேரில் விசாரிக்க திட்டம் உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
சென்னை MTC பேருந்துகளில் கட்டணமின்றி 20 கிலோ எடை வரை செல்லலாம்- எதற்கெல்லாம் கட்டணம்? முழு விவரம் உள்ளே !
-
”கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு கூட்டுறவுத்துறை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !