Tamilnadu
”மோடி அளிக்காத செயல்திறனை மு.க.ஸ்டாலின் செய்கிறார்” பெருமைப்படுத்திய தி எகனாமிஸ்ட்; சன்நியூஸ் புகழாரம்!
உலகின் தலைசிறந்த இதழ்களில் ஒன்றான "தி எகனாமிஸ்ட்’’ இதழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பற்றி கட்டுரை ஒன்றை வெளியிட்டுப் பெருமைப்படுத்தியுள்ளதை "சன்நியூஸ் தொலைக்காட்சி’’ பாராட்டியிருக்கிறது.
இதுகுறித்து சன் நியூஸ் தொலைக்காட்சியில்’’ ஒளிபரப்பான செய்தி வருமாறு :-
உலகின் தலைசிறந்த பத்திரிகைகளில் ஒன்றாகக் கருதப்படும் "தி எகனாமிஸ்ட்’’ 127 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அரசியல், வணிகம், தொழில் நுட்பம் என பல்வேறு தளங்களில் கட்டுரை வெளியிடும் "எகனாமிஸ்ட்’’ இதழுக்கு உலகம் முழுக்க 16 லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் இருக்கிறார்கள்.
இப்படி பல பெருமைகளைக் கொண்ட "தி எகனாமிஸ்ட்’’ இதழில் ஒரு முழுப் பக்க அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவரது அரசின் செயல்பாடுகள் குறித்தும் புகழ்ந்து கட்டுரை வெளியிட்டுள்ளது. "மீட் தி திராவிடன்’’ எனும் தலைப்பில் வெளிவந்துள்ள கட்டுரை இந்தியாவின் பிரதமரான மோடி அளிக்காத செயல்திறனை விட தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்திறனைப் புகழ்ந்துள்ளது.
சோவியத் ஒன்றியத்தின் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் இறந்த அதே வாரத்தில் பிறந்த தனது மகனுக்கு அவரது நினைவாக ஸ்டாலின் என கலைஞர் பெயர் சூட்டியது குறித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருத்தமான முறையில் சிக்கல்களை அணுகுகிறார்!
மு.க.ஸ்டாலின் கவர்ச்சி அரசியல் செய்வதை விட பட்டறிவின் அடிப்படையில் பொருத்தமான முறையில் சிக்கல்களை அணுகுவதாகஎன அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
நோபல் பரிசு பெற்ற எஸ்தோபர் குளோபட் மற்றும் பிரதமர் மோடி அரசின் பொருளாதார கொள்கையுடன் மாற்றுக்கருத்துக் கொண்ட பொருளாதார அறிஞர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட ஐந்து பொருளாதார அறிஞர்கள் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழுவை மாநில வளர்ச்சிக்கு அமைக்கப்பட்டதை கட்டுரையில் பாராட்டியுள்ளது.
இந்த பொருளாதார அறிஞர்களைக் கொண்ட நியமனங்கள் பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குமான வேறுபாட்டை காட்டும் வகையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசு மற்றும் பிரதமர் மோடியின் அதிகாரப் பரவலாக்கலுக்கும் எதிரான எதிர்க்கட்சிகளின் முகமாக மு.க.ஸ்டாலின் உள்ளதாகவும் எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்துக் களமிறங்கப் போவது யார் என்ற கவனம் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் ஆகியோர் மீது விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990-லேயே மக்களின் மனதில் இடம் பிடிக்கத் தொடங்கிவிட்டார்!
கொரோனா தொடர்பாக அமைக்கப்பட்ட சட்டமன்றக் கட்சி பிரதிநிதிகளின் குழுவில் முந்தைய அ.தி.மு.க. அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரை இணைத்ததின் மூலம் ஒரு சிறந்த நடைமுறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளதாகவும் "தி எகனாமிஸ்ட்’’ புகழாரம் சூட்டியுள்ளது.
இவ்வாறு அந்தக் கட்டுரையை "சன்நியூஸ் தொலைக்காட்சி’’ புகழ்ந்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!