Tamilnadu
“விவாகரத்து வழக்கிற்காக வந்த பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வழக்கறிஞர்”: திருவள்ளூரில் நடந்த அவலம்!
திருவள்ளூர் அருகே விவாகரத்து வழக்கிற்காக வந்த பெண்ணை வீடிற்கு அழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நிர்வாண படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என பணம் கேட்டு மிரட்டியதாக பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்கறிஞர் கைது.செய்யப்பட்டார்.
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், விவாகரத்து பெறுவதற்காக திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் டார்ஜன் என்பவரிடம் அந்த இளம் பெண் அணுகியுள்ளார்.
அப்போது ஆவணங்களை வீட்டுக்கு கொண்டுவருமாறு கூறியதையடுத்து அந்த பெண் மணவாளநகரில் உள்ள வீட்டிற்கு சென்ற போது குளிர்பானம் கொடுத்துள்ளார். அதை அருந்திய சிறிது நேரத்தில் அந்தப் பெண் மயங்கியதாகவும், அப்போது தன்னை நிர்வாணமாக்கி ஆபாசமாக புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உன்னை நிர்வாணமாக எடுத்த படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவேன் எனக் கூறி அந்தப் பெண்ணிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி 3 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார். இதற்கு உடந்தையாக வழக்கறிஞர் டார்ஜனின் மனைவியும் உடந்தையாக இருந்ததாகவும், உல்லாசத்திற்கு அழைத்து அடிக்கடி தொந்தரவு செய்ததாகவும் அந்த இளம் பெண் திருவள்ளூர் அனைத்து மக்களிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ராஜாமணி வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், நிர்வாணமாக படம் எடுத்ததாகவும், அதை வைத்து பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து விவாகரத்து கேட்டு வந்த இளம் பெண்ணிடம் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நிர்வாணப்படம் எடுத்து மிரட்டி 3லட்சம் பணம் பெற்றதும், மேலும் பணம் கேட்டு மிரட்டுவதுடன் உல்லாசத்திற்கு அழைத்ததாக கொடுத்ததாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு விவாகரத்து கேட்டு வந்த பெண்ணிடம் கள்ளக்காதலில் ஈடுபட்ட வழக்கறிஞர் வெங்கடேசன் என்பவரை குடும்பத்தோடு வெட்டி கொலை செய்த சம்பவம் நடந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!