Tamilnadu

சிறுவர்களை குறிவைத்து போதை ஊசி பழக்கத்திற்கு அடிமையாக்க முயற்சி.. கோவையில் 2 இளைஞர்கள் கைது !

கோவை மாவட்டம், போத்தனூர் இட்டேரி ஓடை பகுதிக்கு காரில் இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். இவர்கள் அப்போது அங்குவிளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து, வலுக்கட்டாயமாகப் போதை ஊசி போட்டுக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

இதை அறிந்த அப்பகுதி மக்கள் போத்தனூர் கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்த கிராம நிர்வாக அலுவலர் பாலதுரைசாமி, தனது உதவியாளருடன் அங்கு சென்றார். இதனை அறிந்த இளைஞர்கள் காரைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அப்போது அந்த இளைஞர்கள் வந்த காரில், போதை ஊசிகள், மருத்து தயாரிக்கப் பயன்படுத்தும் மாத்திரைகள் இருந்துள்ளனர்.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பாலதுரைசாமி போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, காரில் இருந்த போதை ஊசிகளையும், மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த இளைஞர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், போத்தனூர் சாய்நகர் பகுதியை சேர்ந்த இம்ரான்கான், அபுபக்கர்சித்திக் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலிஸார் இருவர் மீதும் போதை பொருள் ஒழிப்பு சட்டம் மற்றும் சிறார் நீதி சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Also Read: “பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மோசடி கும்பல் கைது” : திருப்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!