Tamilnadu

"பா.ஜ.க அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு ரூ.3,000 கோடி இழப்பு": சபாநாயகர் அப்பாவு தகவல்!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்கடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்ட உணவு வழங்கல் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றிய சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, "தமிழ்நாட்டில் 2 கோடியே 14 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு, 37 ஆயிரத்து 723 நியாயவிலைக் கடைகள் மூலம் பொது விநியோகத் திட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.

ஒன்றிய அரசு கொண்டுவந்த உணவு பாதுகாப்பு சட்டத்தால், தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்புத் துறைக்கு புதிதாக 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்திற்கு மூவாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.” என்றார்.

மேலும், ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஒரு நியாயவிலைக் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Also Read: “தமிழ்நாடு அரசின் முயற்சி வெல்லட்டும்.. வழிவிடட்டும் ஒன்றிய அரசு” : தினகரன் தலையங்கம்