Tamilnadu
தொழிலதிபரை கடத்தி மோசடி: கானத்தூரில் பதுங்கிய இந்து மகா சபா தலைவர் CBCID போலிஸாரால் அதிரடி கைது!
2019 ஆம் ஆண்டு சென்னை அய்யபாக்கத்தை சேர்ந்த தொழிலதிபரான ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்தி சொத்துக்களை அபகரித்ததாக, காவல் உதவி ஆணையர் சிவக்குமார் மற்றும் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும், தொழிலதிபர் வெங்கடேஷ் சீனிவாசராவ் ஆகியோர் மீது ராஜேஷ் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தொழிலதிபரை கடத்தி நில மோசடி செய்தது தெரிய வந்ததால் திருமங்கலம் உதவி ஆணையராக இருந்த சிவகுமார், காவல் ஆய்வாளராக இருந்த சரவணன், காவல் உதவி ஆய்வாளராக இருந்த பாண்டியராஜன், அனைத்திந்திய இந்து மகா சபா கட்சியின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ, ஸ்ரீனிவாசராவ், அவரது மகன் தருண் கிருஷ்ணபிரசாத், சிவா உள்ளிட்ட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
போலி ஆவணங்கள் தயாரித்தல், பொய்யாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை உண்மை என பயன்படுத்துதல், மோசடி, கூட்டு சதி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குற்றவாளிகளை தேடும் பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் சென்னையை அடுத்த கானத்தூர் அருகே கோடம்பாக்கம் ஸ்ரீயை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கோடம்பாக்கம் ஸ்ரீயை மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்புக்கு சிபிசிஐடி போலீசார் அழைத்து வந்தனர். அப்போது செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களின் மொபைல் போனை பறித்த அவரது ஆதரவாளர்கள் அநாகரிகமான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து தாக்க முற்பட்டனர். மேலும் ஒளிப்பதிவாளர் ஒருவர் வைத்திருந்த கேமராவை கீழே தள்ளிவிட்டு சேதப்படுத்தினர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த எழும்பூர் போலீசார், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து மொபைல் மற்றும் கேமராவை சேதப்படுத்திய கோடம்பாக்கம் ஸ்ரீ-ன் ஆதரவாளர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!