Tamilnadu
"தமிழ்நாட்டில் புதிய கால்நடை கல்லூரிகள்... பட்ஜெட்டில் அறிவிப்பு": அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேட்டி!
திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் 13 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு கூடுதல் வகுப்பறை மற்றும் மாணவர் விதி கட்டிடங்கள் கட்டும் பணிகளை மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,"தமிழ்நாட்டில் கிராமப்புற மாணவர்களுக்குக் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் புதிதாகக் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்.
அதேபோல் கால்நடைத்துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.1000 கோடி ரூபாய் மதிப்பில் சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை ஆராய்ச்சி கூடத்தின் செயல்பாடு குறித்து துறை ரீதியாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆடுகளுக்கு ஆட்டம்மை நோய் தாக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் திருநெல்வேலி எம்பி ஞானதிரவியம், எம்எல்ஏ அப்துல்வகாப், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் கா.நா. செல்வகுமார், பதிவாளர் டென்சிங் ஞானராஜ், கல்லூரி முதல்வர் ஆ. பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!