Tamilnadu
கேரளாவில் மீண்டும் பரவும் கொரோனா: இ-பாஸ் கட்டாயம் - தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்திய நீலகிரி ஆட்சியர்!
தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் உள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள தமிழ்நாடு அரசு.
இந்நிலையில், தமிழகத்திலுள்ள நீலகிரி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலத்தில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து செல்லும் சூழ்நிலையில் தமிழக - கேரளா எல்லை மூடப்பட்டு மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் எல்லையிலுள்ள எருமாடு, சேரம்பாடி, பாட்டவயல், பிதர்காடு, அம்பலமூலா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள், கேரள மாநிலம் வயநாடு பகுதிக்கு தேயிலைத் தோட்ட தொழிலாளர் பணிக்கு செல்கின்றனர்.
அவ்வாறு செல்லும் அனைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கும் 100% தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ள நிலையில், கேரளாவில் தொற்று அதிகரிப்பதால் நீலகிரி எல்லையோர கிராமங்களில் வசிக்கும் தோட்ட தொழிலாளர்கள் கேரளாவுக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!