Tamilnadu
“நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் பணி 90% முடிவடைந்துவிட்டது” - ஏ.கே.ராஜன் பேட்டி!
நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.
ஏ.கே.ராஜன் குழு பாதிப்புகளை ஆராயும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பெற்றோர்கள், மாணவர்கள், மற்றும் பொதுமக்களிடம் இருந்து கிட்டத்தட்ட 80 ஆயிரத்திற்கும் அதிகமான புகார்கள் வரப்பெற்ற நிலையில், அவற்றை அக்குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.
அவை அனைத்தையும் ஆராய்ந்து அறிக்கை தாயாரிக்கும் பணிகள் ஓரளவுக்கு நிறைவடைந்துள்ள நிலையில், பா.ஜ.கவை நிர்வாகி கரு.நாகராஜன், நீட் பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்ட குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், இந்த குழுவின் 4-வது ஆலோசனைக் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவத்துறைச் சிறப்பு செயலாளர் செந்தில்குமார், பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா, சட்டத்துறைச் செயலாளர் கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குழுவின் வேண்டுகோளின்படி நீட் தேர்வால் பாதிக்கப்பட்டோர், பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.ராஜன், நீட் தேர்வின் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டதாகவும் மிக விரைவில் ஆய்வுப் பணிகள் முடிவடைய உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வால், அரசுப் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய ஏ.கே.ராஜன், குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகள் முடிவடையும் என்பதால் கால அவகாசத்தை நீட்டிக்கும்படி அரசிடம் கோரப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!