Tamilnadu

தனக்குப் பரிசாக வந்த புத்தகங்களை கன்னிமாரா நூலகத்திற்கு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017ம் ஆண்டு முதல் தன்னை சந்திக்க வருபவர்கள் பொன்னாடை மற்றும் பூங்கொத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதற்குப் பதில் அறிவுசார் புத்தகங்களை வழங்க வேண்டும் என தி.மு.க தொண்டர்களுக்கும் மற்றும் தன்னை சந்திக்க வரும் நபர்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

முதலமைச்சரின் இந்த வேண்டுகோளை அடுத்து யார் சந்திக்க வந்தாலும் புத்தகங்களை மட்டுமே பரிசாகக் கொடுத்து வருகின்றனர். இப்படி 2017ம் ஆண்டு முதல் தனக்கு வழங்கப்பட்ட 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தமிழ்நாட்டின் பல்வேறு நூலகங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாகச் சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலகத்திற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆயிரம் புத்தகங்களை பொது நூலக இயக்க இணை இயக்குநர் கே.செல்வக்குமார், கன்னிமாரா பொது நூலக துணை நூலகர் எம்.கணேஷிடம் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த செயலுக்கு எழுத்தாளர்களும், வாசகர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Also Read: “ஒரு சிறந்த ஆட்சியாளராக வரலாற்றில் இடம்பெற விரும்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின்” : ‘The Economist’ புகழாரம்!