Tamilnadu

தமிழகத்தை ஒடுக்க வேண்டும் என்பதற்காக மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசு முயற்சி -பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், பூவுலகின் நண்பர்கள் ஜி.சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த பிரசுரத்தை பூவுலகின் நண்பர்கள் யுவராஜ் வெளியிட்டார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஒன்றிய அரசு தமிழகத்தை ஒடுக்க வேண்டும் என வக்கிரப் புத்தியுடன் மேகதாது அணைக் கட்ட வேண்டும் என முயற்சி செய்கிறது.

மேலும் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் காவிரி கண்காணிப்புக் குழு அலுவலகம் பெங்களூர் நகரத்தில் உடனடியாக ஏற்படுத்தி அணைகளில் நீர் நிர்வாகம் நீதி நிர்வாகத்தில் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும்.

காவேரி மேலாண்மை ஆணையம் இன்றைய காலத்தில் கூட்டங்கள் நடத்துவது உறுதிப்படுத்த வேண்டும். மேகதாது அணை கட்டும் வரைவு திட்டம் தயாரிப்பதற்கு ஒன்றிய அரசு அனுமதி கொடுத்துள்ளதற்கு ஆணையம் தடை விதிக்க வேண்டும்.

கர்நாடக அரசு ஆணையம் அனுமதி இன்றி மேகதாது அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தும் அது குறித்து விவாதிப்பது சட்டவிரோதம் என அறிவிக்க முன் வர வேண்டும். ஆணையத்தின் அனுமதி இல்லாமல் சம்மந்தப்பட்ட கர்நாடகம் தமிழகம் கேரளா புதுச்சேரி மாநிலங்களில் நீர் நிர்வாகம் மேற்கொள்ள ஆணையம் தடை விதிக்க செய்திட வேண்டும்.

காவிரியின் வலது கரை ஒகேனக்கல் வரை கர்நாடகத்திற்கு சொந்தமானது என்பதால் ராசிமணல் அணையிலிருந்து மின்சாரம் தயாரித்துக் கொள்ளவும் பெங்களூர் நகரத்திற்கு கர்நாடக அரசிடம் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.

ஒன்றிய அரசும் ஜனசக்தி பிரயோக வரி குறித்த நிர்வாக அதிகாரங்களில் ஆணையம் அனுமதி என்று நேரில் தலையிடுவதை ஆணையம் அமைக்க கூடாது என்பதும் தமிழகம் வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என தெரிவித்தனர்.

Also Read: “மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று கூறுவதற்கு தடை விதிக்க முடியாது”: மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் அதிரடி!