Tamilnadu
சட்டத்திற்குட்பட்டு கட்டட வரைபடம் இருந்தால் 60 நாளில் CMDA அனுமதி - அமைச்சர் முத்துசாமி தகவல்!
CMDAவை அணுகும் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு கட்டட வரைபடம் இருந்தால் 60 நாட்களில் அனுமதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார் என வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பின் அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.
சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, வீட்டு வசதி வாரிய துறையி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் துறையின் செயலாளர் ஹிதேஷ் குமார் மக்வான உள்ளிட்ட உயரதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, சி.எம்.டி.ஏ-விற்கு தேவையான அளவிற்கு பணியாளர்கள் இல்லாத காரணத்தால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. காலியிடங்களை நிரப்புவதன் மூலம் சி.எம்.டி.ஏ ஊழியர்களின் பணிச்சுமை குறையும் என தெரிவித்தார்.
சி.எம்.டி.ஏ வை அணுகும் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு கட்டிட வரைபடம் இருந்தால் 60 நாட்களில் அனுமதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், கோயம்பேடு காய்கறி சந்தையை புதுப்பிக்கும் அவசியம் உள்ளது என்றும் மழை பெய்தால் தண்ணீர் தேங்குவது, குப்பைகளை அகற்றுவதில் தனி கவனம் செலுத்துவோம். கோயம்பேடு காய்கறி சந்தையில் செவ்வாய்கிழமை நேரில் ஆய்வு செய்யவுள்ளோம் என அமைச்சர் முத்துசாமி கூறினார்.
முதலமைச்சரின் நீண்ட கால திட்டம் பற்றி பேசி இந்த கூட்டத்தில் பேசி இருக்கிறோம் என்றும் முதலமைச்சர் எங்களை சந்திக்கும் போதெல்லாம் மக்களின் குறைகளை எவ்வாறு கேட்டு தெரிந்துள்ளீர்கள் என்று தான் கேட்கிறார்.
மக்களிம் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களுக்கு உள்ள பிரச்சனைகள் மற்றும் கால தாமதத்தை விரைவில் சரி செய்யப்படும் என அமைச்சர் முத்துசாமி பேசினார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!