Tamilnadu
“நிபுணத்துவம், அறிவு அடிப்படையிலான ஒரு ‘மாதிரி அரசு’ தமிழ்நாட்டில் செயல்படுகிறது” : ரூபாலி ஸ்ரீவஸ்தவா !
5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாட்டில் நிபுணத்துவம் மற்றும் அறிவு அடிப்படையிலான ஒரு மாதிரி அரசு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று வலைதளத்தில் ரூபாலி ஸ்ரீவஸ்தவா புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழநாடு முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட குழுதான் நாடு முழுவதும் தற்போதைய பேசுபொருளாக உள்ளது.
சமூக வலைதளத்தில் ரூபாலி ஸ்ரீவஸ்தவா நேற்று (23.6.2021) வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- “உடன்பாடு இல்லாதவர்கள் என்று கருதப்பட்டவர்கள் எப்படி இணைந்து செயல்பட முடியும் என்பதை மகாராஸ்டிரா செயல்படுத்திக் காட்டிய பிறகு..
பா.ஜ.க.வின் பணம் +ஆள்பலம் + பிரச்சாரம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை எப்படி முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதை வங்காளம் செயல் படுத்திக் காட்டிய பிறகு.. நிபுணத்துவம் மற்றும் அறிவு அடிப்படையிலான மாதிரி ஆட்சி முறையை தமிழ்நாடு செயல்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?