Tamilnadu
“பிரதமர் மோடி செய்யாததை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்கிறார்” : ‘The Telegraph’ ஆங்கில நாளேடு புகழாரம்!
5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி செய்யாததை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து கொண்டிருப்பதாக ‘தி டெலிகிராஃப்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
தமிழநாடு முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட குழுதான் நாடு முழுவதும் தற்போதைய பேசுபொருளாக உள்ளது.
இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள ‘தி டெலிகிராப்’ ஆங்கில நாளிதழ், பிரதமர் மோடியால், வேண்டாம் என ஒதுக்கிய அறிவார்ந்த நபர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைத்துள்ளதாக பாராட்டியுள்ளது. நாட்டிலேயே இது முதல்முறை என்றும், எந்தவொரு மாநிலமும் பொருளாதார ஆலோசகர்கள் குழு மூலம் பொருளாதார கொள்கைகளை வகுக்காத நிலையில், தமிழ்நாடு அரசு எடுத்துள்ள சீரிய முயற்சி பாராட்டத்தக்கது எனவும் ‘தி டெலிகிராஃப்’ கூறியுள்ளது.
உச்சத்தை எட்டும்!
இதுபோன்ற பொருளாதார ஆலோசனைக் குழு, அகில இந்திய அளவில் உருவானால், இந்தியாவின் பொருளாதாரம், இதற்கு முன்பு எட்டிய உச்சத்திற்கு மீண்டும் திரும்பும் என உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு கூறியுள்ளதை ‘தி டெலிகிராஃப்’ சுட்டிக்காட்டியுள்ளது.
பிரதமர் மோடி செய்யாததை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்கிறார் என்று ‘தி டெலிகிராஃப்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின், பொருளாதார வல்லுநர்கள் குழுவை ஒன்றிணைக்கும் முடிவுக்கு பொருளாதார வல்லுனர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.
‘தி டெலி கிராஃப்’ ஆங்கில நாளேட்டில் வெளியான செய்திக் கட்டுரையின் முக்கிய பகுதி வருமாறு:
நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்ளோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட 5 நிபுணர்களைக் கொண்ட முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன், பொருளியல் வல்லுநரும், சமூக ஆர்வலருமான ஜீன்ட்ரேஸ், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் எஸ்.நாராயணன் ஆகிய மூவரும் அக்குழுவின் மற்ற உறுப்பினர்களாவர்.
மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி தமிழகத்தில் வெற்றிபெற்று ஆட்சி அமைந்ததை அடுத்து, நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்துகையில் இந்தக் குழு அமைப்பது தொடர்பாக தனது உரையில் குறிப்பிட்டார். இது தொடர்பாக அன்று மாலையே அரசாணை வெளியிடப்பட்டது. இந்தப் புதிய குழு மாநில திட்டக் குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்படும். இது தொடர்பான ஆணை வெளியிடப்பட்டுள்ளது என்று குழுவின் உறுப்பினர் என்.நாராயணன் தெரிவித்தார்.
ஜீன் ட்ரெஸ் தனக்கான ஆலோசனைக் குழு உறுப்பினர் பொறுப்பை ஏற்றுக்கொண்டுவிட்டதாக இ.மெயில் மூலம் தெரிவித்துள்ளார். தற்போது சட்டீஸ்கரில் இருக்கும் அவர், எனக்குள்ள அனுபவத்தின் அடிப்படையில், என்னால் இயன்றளவு உதவுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மோடி அரசின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தவர்களான இந்திய ரிசர்வு வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும், அரவிந்த் சுப்ரமணியனும் எப்படிப்பட்ட ஆலோசனைகளை வழங்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு பல்வேறு பொருளாதார நிபுணர்கள் அடங்கிய ஆலோசனைக்குழு அமைத்ததற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நிபுணர்களால் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.
“இது ஒரு பாராட்டத்தக்க செய்தி. வாழ்த்துகள் மு.க.ஸ்டாலின் அவர்களே! இதுபோன்ற பொருளாதார ஆலோசனைக் குழு அகில இந்திய அளவில் உருவாகுமேயானால், இந்தியப் பொருளாதாரம் இதற்கு முன்னதாக எட்டிய உச்சத்திற்கு மீண்டும் திரும்பும்” என உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணரும் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தலைமை பொருளாதார ஆலோசகருமான கவுஷிக் பாஷூ தெரிவித்துள்ளார்.
பி.ஆர்.அம்பேத்கர் பொருளாதாரப் பள்ளிக்கான துணைவேந்தர் என்.ஆர்.பானுமூர்த்தி, இது பற்றி குறிப்பிடுகையில், மாநில பொருளாதார கொள்கைகள் தொடர்பாக வல்லுநர்கள் கொண்ட குழுவை அமைப்பது அநேகமாக இதுவே முதன்முறையாக இருக்கும் என்று கருதுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பா.ஜ.க கூட்டணியில் இருந்து கொண்டு, அ.தி.மு.க ஆட்சி செய்து வந்த நிலையில், தமிழ்நாட்டில் நிதிநிலை பற்றாக்குறை அதிகரித்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்பும் அதேநேரம் அதிகரித்துள்ளது. இத்தகைய நிலையில், இந்தக் குழு தமிழ்நாட்டின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை ஜூலை மாதம் கொண்டுவர இருப்பதாக ஆளுநர் தமது உரையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் ரூ.5லட்சத்து 12 ஆயிரம் கோடி கடன் உள்ளது. 2015-16 ஆண்டின் நிதிநிலையை ஒப்பிடும்போது 124 சதவிகிதம் அதிகம் என்று கடந்த அக்டோபரில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ” எனத் தெரிவித்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!