Tamilnadu

16வது சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்கியது : “தமிழ் இனிமையான மொழி” என உரையைத் தொடங்கிய ஆளுநர்!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், 133 சட்டமன்ற உறுப்பினர்களுடன் வெற்றி மகுடம் சூடியது தி.மு.க. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், 16 ஆவது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

கொரோனா தொற்று பரவல் இருப்பதால், கலைவாணர் அரங்கத்தில் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். பின்னர் சபாநாயகர் இருக்கைக்குச் சென்ற ஆளுநர் தமிழ் இனிமையான மொழி என கூறி தனது உரையைத் தொடங்கினார்.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

ஆளுநர் உரை முடிந்தவுடன், அவரின் உரையை தமிழில் சபாநாயகர் மு.அப்பாவு வாசிப்பார். அந்துடன் முதல் நாள் கூட்டம் முடிவடையும். பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் எத்தனை நாட்கள் நடத்துவது என அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.

Also Read: அ.தி.மு.க ஆட்சியின் கோர முகம் : மலக்குழியில் சிக்கி பலியான 203 தூய்மைப் பணியாளர்கள் - அறிக்கையில் தகவல்!