Tamilnadu
“தி.மு.க ஆட்சியை யாராலும் ஒரு துரும்பு கூட குறை சொல்ல முடியாது” : அமைச்சர் மூர்த்தி புகழராம்!
மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கருவனூரில் புதிய மின்மாற்றியை வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில், ஆட்சியர் அனிஷ்சேகர் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.மூர்த்தி, "கடந்த காலத்தில் மின்தடை ஏற்பட்டுள்ள இடங்களில் தற்போது தேவையின் அடிப்படையில், மின்மாற்றிகள், 110 கேவி துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கருவனூர் பகுதி மக்களின் கோரிக்கையின் படி, ரூ.3 கோடியில் துணை மின்நிலையம் அமைக்கப்படும். மின்சார வழித்தடங்களை பராமரிக்காத காரணத்தால், ஆங்காங்கே சில இடங்களில் மின்தடை இருக்கலாம். எதிர்க்கட்சியினர் இதை தவறாக பிரச்சாரம் செய்கின்றனர்.
தற்போது, முதலமைச்சரின் நடவடிக்கையால் மதுரை மாவட்டத்தில் 140க்கு கீழ் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. மேலும், எதிர்க்கட்சியாக இருந்தபோது, ரூ.5,000 கொரோனா நிதி வழங்க வலியுறுத்தினோம். ஆனால், ரூ.1,000 மட்டுமே கொடுக்கப்பட்டது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர், ரூ.4 ஆயிரத்துடன், மளிகை பொருட்களையும் வழங்கியுள்ளோம்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சொல்லும் குற்றச்சாட்டுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது. ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுகிறது. இது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது, மதுரை மாவட்டத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ தொகுதியிலும் தடுப்பூசிகள் பகிர்ந்து கொடுத்து செலுத்தப்படுகிறது. ஒரு துறும்பு கூட குறை சொல்ல முடியாத வகையில், தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறது" என்றார்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!