Tamilnadu
விண்ணப்பித்தவரின் வசிப்பிடத்துக்கே சென்று வீட்டுமனைப்பட்டா வழங்கிய அமைச்சர்... பயனாளிகள் நெகிழ்ச்சி!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வேலாயுதம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்ற நபர் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்த நிலையில், அவர் வசிக்கும் இடத்திற்கே சென்று இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் அரசின் இலவச வீடு கட்டுவதற்கான ஆணையை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் கம்பிளியம்பட்டியில் கொரோனா நிவாரணத்தொகையின் இரண்டாம் தவணை ரூ. 2000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து செந்துறை உள்ளிட்ட கிராமங்களில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் அர.சக்கரபாணி, வடமதுரை அருகே வேலாயுதம்பாளையம் கிராமத்தில் வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்த செல்வராஜ் என்பவரின் இருப்பிடத்திற்கே சென்று, அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது வேடசந்தூர் எம்.எல்.ஏ., காந்திராஜன், கரூர் தொகுதி எம்.பி., ஜோதிமணி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அர.சக்கரபாணி, “டெல்டா பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக அமைக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், எங்கெல்லாம் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொள்முதல் செய்கின்ற நெல்லுக்கு உடனடியாக பணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரக்கூடிய நெல்களை கடந்த காலத்தில் ஐந்து முதல் ஆறு நாட்கள் காக்கவைத்து பெற்றுள்ளனர்.
இனிமேல் அந்த நிலைமை ஏற்படக்கூடாது, என 24 மணி நேரத்தில் நெல் கொள்முதல் செய்து அதற்குரிய பணத்தை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்ய முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
Also Read
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !