Tamilnadu
இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்படும் : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி!
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மையத்தை தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் மற்றும் திருவள்ளூர் ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஆக்சிஜன் படுக்கை வசதிகள் எத்தனை இருக்கிறது என்பதையும், கொரோனா சிறப்பு மையத்தில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் பணி நேரம் குறித்தும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி கட்டிடத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. நாளொன்று 400-க்கும் கீழ் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 13 விழுக்காடு நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் 4 அல்லது 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட முடிவு செய்யபட்டுள்ளது.
மேலும் படுக்கை வசதியை பொறுத்த வரை தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 3 ஆயிரம் இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 70 ஆயிரத்து 817 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு, அதில் ஆக்சிஜன் வசதி 72 வசதிகள் கூடுதலாகவும், சாதாரண படுக்கை வசதி 69 விழுக்காடும் ஐசியூ 44 சதவிகிகம் கூடுதலாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3-வது அலை பாதிப்பிலிருந்து விடுபட தற்போதுள்ள பழக்க வழக்கங்களான முககவசம் அணிதல், சமூக பாதுகாப்பை கடைபிடித்தல் போன்றவற்றை மாற்றக் கூடாது. 2-வது தவணை தடுப்பூசி 84 நாட்களுக்குப் பிறகே போட்டுக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!