Tamilnadu

”முதலமைச்சரின் புயல்வேக நடவடிக்கையால் குறையும் கொரோனா தொற்று” : அமைச்சர் சாமிநாதன் பேட்டி !

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வந்த சூழ்நிலையில், ஆக்சிஜன் வசதி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது.

இந்நிலையில், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமையில், கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களாகத் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் யங் இந்தியன்ஸ் மற்றும் சி.ஐ.ஐ அமைப்பு சார்பாக 70 லட்சம் மதிப்பீட்டில் 350 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டது. இதை இன்று செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்து பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்த அமைச்சர் சாமிநாதன், “தமிழ்நாட்டில் முதலமைச்சரின் தடுப்பு நடவடிக்கைகளால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 2000த்திற்கும் மேல் இருந்த எண்ணிக்கை தற்போது 800 அளவிற்குக் குறைந்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியாலும் மற்றும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் உதவியால் இது சாத்தியப்பட்டுள்ளது. தற்போது படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகள் அதிக அளவில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க போராட்டம் நடத்தாதது ஏன்?” : அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி !