Tamilnadu

“தமிழ்நாடு அரசின் புயல் வேக நடவடிக்கை.. 7,500 படுக்கைகள் காலி” : சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்!

தமிழக அரசின் துரித நடவடிக்கையால் தொற்று சதவீதம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் கொரோனா சிகிச்சை மையங்களில் தற்போது 7,500 படுக்கைகள் காலியாக உள்ளன. முழு ஊரடங்கின் பயனாக தற்போது பாதிப்பு சதவீதம் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் ஆரம்பத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பால் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கைகள் அதிகம் தேவைப்பட்டன.

இதனால், ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை அரசு திறந்தது. இதனால், கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் படுக்கைகள் கிடைத்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்று 20 நாளிலேயே கொரோனா பரவலை குறைத்துள்ளது.

அதன்படி, சென்னையில் தற்போது உள்ளகொரோனா சிகிச்சை மையங்களில் 7,500 படுக்கைகள் காலியாக உள்ளது. மேலும், தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் மூலம் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படாத வகையில் கூடுதல் படுக்கைகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் வீட்டுத்தனிமையில் இருப்பவர்களை போலிஸார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: “தடுப்பூசி விவரங்கள் என்ன ராணுவ ரகசியமா? - பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பதன் பின்னணி என்ன?” : முரசொலி!