Tamilnadu
"பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வழிகாட்டுதல் குழு" - அமைத்தது தமிழ்நாடு அரசு!
கொரோனாவால் பெற்றோர் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்த வழிகாட்டுதல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கொரோனா நோய்த் தொற்று காரணமாகப் பெற்றோர் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளின் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 29-ம் தேதி பல்வேறு நிவாரணத் திட்டங்களை அறிவித்திருந்தார்.
அதில் கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் பெயரில் ரூ. 5 லட்சம் வைப்பு நிதியாக அரசு சார்பில் வழங்கப்படும். இந்த தொகை வட்டியுடன் சம்பந்தப்பட்ட குழந்தைக்கு 18 வயது பூர்த்தி அடையும்போது வழங்கப்படும்.
கொரோனா நோய்த் தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும். அதேபோல் அனைத்து அரசு நலத்திட்டங்களிலும் முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த நிவாரண திட்டங்களைச் செயல்படுத்த விரைவில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வழிகாட்டுதல் குழுவை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு.
நிதித்துறை செயலாளரைத் தலைவராகக் இக்குழுவில் சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறைச் செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளர், சமூக நலத்துறை ஆணையர், குழந்தைகள் நலனுக்காக பணியாற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 2 பேர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் இக்குழு கூடி முன்னதாக ஆலோசனை நடத்தியுள்ளது. திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த தேவைப்படும்போது இந்தக்குழுவினர் கூடி ஆலோசனை மேற்கொள்ளுவார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?