Tamilnadu

20 ஆயிரத்திற்கு கீழே குறைந்த கொரோனா தொற்று... தொடர்ந்து அதிகரித்து வரும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை!

தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் விளைவாக கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறையின் மாநில கட்டுப்பாட்டு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் இன்று 19,448 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,56,681 ஆக உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 1,60,385 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,81,89,065 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று கோவை மாவட்டத்தில் 2,564 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 1,646 பேருக்கும், சென்னையில் 1,530 பேருக்கும்,கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 33,360 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 19,97,299 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 2,32,026 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 351 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 103 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 248 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், கொரோனா உயிரிழப்பு 27,356 ஆக உள்ளது.

Also Read: “கொரோனா வைரஸ் சீனாவால் பரப்பப்பட்டதா?” : ‘Bio Weapon’ சூழ்ச்சி குறித்து இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி!