Tamilnadu
“பாலியல் வன்புணர்வு, கொலை மிரட்டல் புகார்”: அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை நடிகை சாந்தினி அளித்த புகார் பேரில், மணிகண்டன் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவை சேர்ந்த நடிகை சாந்தினி, ‘நாடோடிகள்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 28ம் தேதி புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகாரில், முன்னாள் அமைச்சரான மணிகண்டன், தன்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, பின்னர் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து 5 ஆண்டுகளாக தொடர்பில் இருந்து வந்தார் என்றும், மூன்று முறை தன்னை கருகளைப்பு செய்ய வைத்ததாகவும் நடிகை சாந்தினி தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாது, தற்போது திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தினால், அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுவேன் என்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மிரட்டுகிறார்” என்று சாந்தினி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில், சென்னை அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் மணிகண்டன் பெயரில், 313- பெண்ணின் அனுமதி இல்லாமல் கட்டாயப்படுத்தி கருவை கலைத்தல், 323 - அடித்து காயம் ஏற்படுத்துதல், 417 - நம்பிக்கை மோசடி, 376 - பாலியல் வன்கொடுமை, 506 (1) - கொலை மிரட்டல், 67(a)- தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், விரைவில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது காவல்துறை விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!