Tamilnadu

“கொரேனாவால் இறக்கும் முன்கள பணியாளர்களுக்கு அரசு இழப்பீடு வழங்குவது கொள்கை முடிவு” - ஐகோர்ட் கருத்து!

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு உயிரிழக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, இழப்பீடு வழங்குவது தொடர்பாகத் தமிழக அரசு சில திட்டங்களை அறிவித்துள்ளது என்றும், இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டது.

மேலும், இது கொள்கை முடிவு என்பதால், அரசு தான் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமே தவிர நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், கொரோனாவுக்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது, கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

Also Read: "கொரோனா சிகிச்சை கிடைக்காமல் யாரும் உயிரிழந்ததாக புகார் வரவில்லை"‌: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!