Tamilnadu
கொரோனா & ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? வலைதளம் மூலம் உதவிக்கரம் நீட்ட முன்வந்த தமிழ்நாடு காவல்படை!
உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா (COVID-19) தொற்றுநோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறப்பு காவல், ஆயுதப்படை சமீபத்தில் பொதுமக்களுக்கு பெருமளவில் சேவை செய்யும் மனப்பான்மையோடு பணி செய்ய முன் வந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு சிறப்பு காவல் - ஆயுதப்படை letsfightcorona.com என்ற வலைத்தளத்தைத் தொடங்கி, இதன் மூலம் மெய்நிகர் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்க விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களையும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் வலைத்தளத்தில் உறுப்பினர்களாக இணைக்கிறார்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் - ஆயுதப்படையினர் இந்த வலைத்தளத்தின் மூலம் அவசர உதவி தேவைப்படுபவர்களுக்கு சிரமம் பாராமல் தொண்டு செய்து உதவுகிறார்கள்.
இன்று (27/05/2021), தமிழ்நாடு சிறப்பு காவல் - ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், பல்ஸ் ஆக்சி மீட்டர்கள், 100 லிட்டர் சானிட்டைசர்கள் மற்றும் சில பொருட்கள் அடங்கிய மொத்தம் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பல்வேறு உபயோக பொருட்களை துரை மற்றும் விஜயகுமார், QNet டெக்னாலஜிஸ் மூலமாக டாக்டர்.S.எழிலரசி, M.D, D.C.H., இயக்குநர், தமிழ்நாடு குழந்தைகள் மருத்துவமனை, எழும்பூர் அவர்களுக்கு நன்கொடையாக அளித்தார்கள்.
இதுதவிர, தமிழ்நாடு சிறப்பு காவல் - ஆயுதப்படையினர் பல விழிப்புணர்வு முகாம்களை நடத்தியும், வீடற்றவர்கள் மற்றும் உணவு இல்லாமல் அவதிப்படுபவர்களையும் அறிந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உணவுப்பொருட்களை விநியோகித்து வருகின்றனர். டெலி - கவுன்சிலிங் (தொலைபேசி ஆலோசனை), ஆம்புலன்ஸ் சேவைகள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், உணவுப் பொட்டலங்கள் / மருந்து, மூத்த குடிமக்களுக்கு தேவைப்படும் மளிகை பொருட்கள், முககவசங்கள், கிருமி நாசினி திரவியங்கள் (சானிடைசர்ஸ்) போன்ற தங்கள் தேவைகளை letsfightcorona.com வலைத்தளத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம்.
இதுபோன்ற உதவி தேவைப்படுபவர்களுக்கு தாங்கள் சொந்தமாகவோ அல்லது தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் விருப்பமுள்ள நன்கொடையாளர்கள் (ஸ்பான்சர்கள்) மூலமாகவோ கிடைக்க தமிழ்நாடு சிறப்பு காவல் - ஆயுதப்படை காவலர்கள் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து தொண்டாற்றி வருகின்றனர்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !