Tamilnadu
“ஆக்சிஜன் உற்பத்தி செய்ய போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க நெல்லை மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை பணிகள் முன்னேற்றம் குறித்து நெல்லை மாவட்ட ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்ட தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இரண்டாம் நாளான நேற்று முன்தினம் பாளையங்கோட்டை காந்திமதி அம்மன் கொரோனா பரிசோதனை மையத்தினையும், கங்கை கொண்டான் சிப்காட்டில் அமைந்துள்ள தனியார் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையையும் ஆய்வு மேற்கொண்டு ஆக்ஸிஜனை சிலிண்டர்களை அடைத்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியினையும் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் நெல்லை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான மு.அப்துல்வகாப் ஆகியோர் பங்கேற்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க நெல்லை மாவட்டத்தில் கொரோனாநோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்தும் அடிப்படையிலும், முன்னேற்பாடு குறித்தும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பாளையங்கோட்டையில் காந்தி மதியம்மன் கொரோனா பரிசோதனை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும், டிரோன் மூலம் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு அங்கு 100 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிதாக உருவாக்கப்பட்ட காந்திமதியம்மன் கொரோனா சிகிச்சை மையத்தினையும், அதனைத் தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆக்சிஜனை உற்பத்தி தொழிற்சாலையை ஆய்வு செய்து, ரூர்கோலாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆக்சிஜனை சிலிண்டரில் அடைத்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியையும் துவக்கி வைத்தார்.
பின்னர் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளரிடம் கூறியதாவது:-
தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் இயங்காமல் இருக்கும் ஆக்ஸிஜன் ஆலைகளை தற்போது தேவையைக் கருத்தில் கொண்டு உடனடியாக செயல் பாட்டிற்குக் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்காமல் இருக்கும் தனியார் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு உள்ளோம்.
தற்போது உள்ள ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு உடனடியாக ஆலையை திறக்க நடவடிக்கை எடுப்படும். கங்கைகொண்டானில் ஆலையை இயக்குவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு தரப்பில் செய்து கொடுப்பதாக அதன் உரிமையாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையில் 2.5 கிலோ லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் உள்ள நிலையில் 2014 ஆம் ஆண்டு முதல் இந்த ஆலை இயங்காமல் இருக்கிறது. அதனை உடனடியாக இயக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்தஸ்தில் உள்ள நெல்லை கோட்டாட்சித் தலைவரை பொறுப்பாக நியமித்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மிக விரைவில் இந்த ஆலையிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தென்மாவட்டங்களுக்கு வழங்கப்படும். இதேபோல் தமிழகம் முழுவதும் இயங்காமல் இருக்கும் ஆக்சிஜன் ஆலைகளை செயல்படுத்துவதற்கு தமிழக முதல்வர் உத்தரவுப்படி முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!