Tamilnadu

தொற்று பரவலை தடுக்க வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு: களப்பணியில் அமைச்சர் நாசர்.. தொகுதிமக்கள் பாராட்டு!

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகிவருவதை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவமனையினை பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு செய்தார்.

அப்போது ஆவடி வியாபாரிகள் சங்கம் சார்பில் 3 லட்சம் மதிப்பீட்டில் 6 ஆக்சிஜன் கருவிகளை அமைச்சர் நாசரிடம் வழங்கினர். பின்னர், கொரொனா தடுப்பு நடவடிக்கையாக வீடு தோறும் காய்ச்சல் குறித்த கணக்கெடுப்பு பணிகுறித்து மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வீடு, வீடாகச் சென்று கணக்கெடுப்பு பணியினை நாசர் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் குப்பை சேமிப்பு கிடங்கை ஆய்வு செய்து அதனை விரைவில் பூங்காவாக உருவாக்கபடும் என உறுதியளித்தார்.

பிறது செய்திளார்களை சந்தித்த அமைச்சர் சா.மு.நாசர், “கொரொனா தடுப்பு நடவடிக்கைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு பகல் பாராது அயாராது உழைத்து வருவதால் தமிழகத்தில் கொரோனா 3வது அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தாயாரக உள்ளது” என தெரிவத்தார்.

Also Read: “100 நாட்களில் செய்வோம் என்று கூறி, பத்தே நாட்களில் செய்து முடிந்தார்” : பயனாளிகள் நெகிழ்ச்சி பேட்டி!