Tamilnadu

“கொரோனா தடுப்பு பணியில் என்ன தேவையென்றாலும் உடனடியாக தீர்க்கப்படும்” : வருவாய்த்துறை அமைச்சர் உறுதி!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும், தங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உடனடியாக என்னென்ன தேவைகள் உள்ளது எனவும் அமைச்சர் கேட்டறிந்தார்.

மேலும் முன்களப்பணியாளர்களுக்கு 3 அடுக்கு மாஸ்க் வழங்க வேண்டும் எனவும், அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைபாடு இருந்தாலும், ரெம்டெசிவர் கூடுதலாக தேவை என்றாலும் உடனடியாக ஏற்பாடு செய்துதருவதாகவும் அதிகாரிகளிடம் உறுதியளித்தார்.

அதேபோல், அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் மாஸ்க், ஆக்சிஜன் செறிவூட்டி உள்ளிட்ட முக்கிய உயிர்காக்கும் உபகரணங்களை உடனடியாக ஏற்பாடு செய்துதருவதாகவும் அதிகாரிகளிடம் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Also Read: தடுப்பூசி முகாம் திறப்பு.. தொகுதி மக்களுக்கு நிவாரணம்.. களத்தில் இறங்கி ஆய்வு: உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!