Tamilnadu

“ஆதியோகி சிலைதான் தமிழ்நாட்டின் அடையாளமா?” - இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்ட ஆவணத்தால் சர்ச்சை!

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகி வருகிறது. அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கையும் உயர்ந்தே வருகிறது.

மேலும் மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை தடுக்க முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தாலும் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டே வருகின்றன.

இந்நிலையில், இந்திய விமான நிலையங்கள் ஆணையம், மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தான ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பக்கத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக ஆதியோகி சிலையின் படம் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காடுகளை அழித்து சிவன் சிலை என தன் சிலையையே எழுப்பிய ஜக்கி வாசுதேவ் தான் தமிழ்நாட்டின் அடையாளமா? தமிழ்நாட்டில் எத்தனையோ வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் இருக்கின்றன. சுதந்திர போராட்டத்தின் தன் உயிரை கொடுத்த தியாகிகள் சிலைகள் இருக்கின்றன. இவை எல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை. இந்தியைத் திணிப்பதைப் போல் தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவை மாற்ற நினைக்கிறீர்களா? தமிழ்நாடு திராவிட மண்; இதை ஒருபோதும் அனுமதிக்காது என அரசியல் விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களை உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “தடுப்பூசி, மருந்துகளுக்கு GST வரியை ரத்துசெய்யுங்கள்”: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!