Tamilnadu
மீனம்பாக்கத்தில் கோவிட் சித்தா மருத்துவ மையம் திறப்பு: விரைவில் 33 மையங்கள்-முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வரும் நிலையில், சித்தா மருத்துவமனைக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து புதிதாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்கான சித்தா மருத்துவ மையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதனடிப்படையில் முதல்கட்டமாக வியாசர்பாடியில் சித்தா கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்கான சித்தா மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.
140 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள சித்தா மருத்துவ மையத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்துப் பார்வையிட்டார். அப்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனிருந்தார்.
தற்போது 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் இவை 33 சித்தா சிகிச்சை மையங்களாக அதிகரிக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் சித்தா மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!