Tamilnadu
“கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர்... மருந்திலும் மோசடி செய்யும் மனிதர்கள்” - சுகாதாரத்துறை செயலர் வார்னிங்!
சென்னை தாம்பரம் அருகே கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை திருவண்ணாமலையில் இருந்து வாங்கி வந்து அதிக விலைக்கு விற்க முயன்ற மருத்துவர் முகமது இம்ரான் நேற்று கைது செய்யப்பட்டார்.
குடிமைப்பொருள் வழங்கல் புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையிலான போலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவரிடமிருந்து ரெம்டெசிவிர் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
4700 ரூபாய்க்கு திருவண்ணாமலையில் விக்னேஷ் என்பவரிடம் ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி வந்து, அதனை சுமார் 20,000 ரூபாய்க்கு விற்க முயன்றபோது மருத்துவர் இம்ரான் போலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மருத்துவர் இம்ரானுடன் வந்த மேடவாக்கத்தை சேர்ந்த விஜய் (29) மற்றும் திருத்தணியை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் ருவண்ணாமலை அரசு மருத்துவமனை தற்காலிக ஊழியர் விக்னேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவர் சச்சின் என்பவர் உள்ளிட்ட நபர்களை தேடிவருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தாம்பரத்தில் ரெம்டெசிவிர் மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக நேற்று எங்களுக்கு புகார் வந்தது. அங்கு சோதனை நடத்தி 17 'வயல்' ரெம்டெசிவிர் மருந்துகளை பறிமுதல் செய்தோம். இப்படி கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்பவர்களுக்கு கடைசி 'வார்னிங்'.
அனைத்து ஆவணங்களுடன் ஏழை, எளிய மக்களுக்கு கே.எம்.சி மருத்துவமனையில் கொடுக்கக்கூடிய ரெம்டெசிவிர் மருந்துகளும் வெளியே போகிறது. குஜராத், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்தும் மருந்துகளை கொண்டு வந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர். அவர்கள் மீது காவல்துறை மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.
Also Read
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
-
“விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக!” : பிறந்தநாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் அறிக்கை!
-
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு!
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!