Tamilnadu
“கொரோனாவால் இறந்த 2,170 பேரின் உடல்களை அடக்கம் செய்திருக்கிறோம்” - இஸ்லாமிய தன்னார்வலர்களின் சமூக சேவை!
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தீவிர பரவலால், உயிரிழப்புகள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களின் வருகையால் சுடுகாடுகள் ஓயாமல் எரிந்து கொண்டிருக்கின்றன.
தொற்றுநோயால் மரணமடைபவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன. உயிரிழப்போரின் உறவினர்கள் தொற்று அச்சம் காரணமாக இறுதிச் சடங்குகள் செய்யத் தயக்கம் காட்டும் சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை இஸ்லாமிய அமைப்பினர் சாதி, மத வேறுபாடுகள் இன்றி அடக்கம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனாவால் இறந்தவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களோ அவர்கள் மத சம்பிரதாயப்படி குடும்பத்தினரை மத சடங்குகள் செய்ய வைத்த பின்னரே அடக்கம் செய்து வருவதாகவும், இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்துள்ளதாகவும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசின் வழிகாட்டுதல்கள், பாதுகாப்பு உபகரணங்களுடன் இந்த அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், அடக்கம் செய்யும் பணிகளில் ஓரே நபர்களை பயன்படுத்தாமல் சுழற்சி அடிப்படையில் ஈடுபடுத்துவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாகச் செயல்படுத்தப்படுவதாகவும், தன்னார்வலர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
"எங்கள் தன்னார்வலர்கள் மார்ச் 31 வரை கொரோனாவால் இறந்த 1,820 நபர்களை அடக்கம்/ தகனம் செய்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் திங்கள்கிழமை வரை 350 க்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்துள்ளோம்" என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ பிரிவு மாநில இணை செயலாளர் எம்.முகமது ரஃபி கூறியுள்ளார்.
வசதியானவர்கள் அடக்கம் செய்ய பணம் கொடுப்பதாகவும், ஏழைகளிடம் பணம் கேட்பதில்லை என்றும் தெரிவிக்கும் இந்த தன்னார்வலர்கள்,கொரோனா தொற்றால் உயிரிழக்கும் நபர்களுக்கு இறுதி சடங்கு செய்வதற்குத் தேவைப்படும் பொருட்களை தமிழக அரசே வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!