Tamilnadu
195 தொகுதிகளில் வென்று ஆட்சியமைப்பார் மு.க.ஸ்டாலின் - தி.மு.க வெற்றியை கட்டியம் கூறும் Exit Poll Results!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
சி வோட்டர் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி தி.மு.க கூட்டணி 160 முதல் 172 தொகுதிகள் வரை வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க கூட்டணி 58 தொகுதிகள் முதல் 70 வரை வெல்ல வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
IndiaAhead நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி தி.மு.க கூட்டணி 165 முதல் 190 தொகுதிகள் வரை வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க கூட்டணி 40-65 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே - மை ஆக்சிஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி தி.மு.க கூட்டணி 175 முதல் 195 தொகுதிகள் வரை வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க கூட்டணி 38 முதல் 54 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 1 முதல் 4 வரை வெல்லக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க 48% வாக்குகளைப் பெறும் என்றும், அ.தி.மு.க 35% வாக்குகளைப் பெறும் என்றும் இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Today's Chanakya நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, தி.மு.க 164 முதல் 186 தொகுதிகள் வரை வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க 48-68 தொகுதிகள் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஏபிபி - சி வோட்டர் கருத்துக் கணிப்பின்படி, தி.மு.க கூட்டணி 166 இடங்களில் வெற்றி பெறும் என்றும், அ.தி.மு.க கூட்டணி 64 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், தி.மு.க கூட்டணி 46.7% வாக்குகளைக் கைப்பற்றும் எனவும், அ.தி.மு.க கூட்டணி 35% வாக்குகளைக் கைப்பற்றும் என்றும் ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, ரிபப்ளிக் CNX நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, தி.மு.க கூட்டணி 160 முதல் 170 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், அ.தி.மு.க கூட்டணி 58 முதல் 68 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!