Tamilnadu
ப்ளீச்சிங் பவுடரில் ஊழல் செய்து வயிறு வளர்த்து வாழும் வேலுமணி இருக்கும் ஊரில் இப்படியும் சில மனிதர்கள் !
தமிழகம் உட்பட நாட்டின் அனைத்தும் மாநிலங்களிலும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை பீடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இறக்கிறார்கள்.
முதல் அலை மூலம் பாடம் கற்று முறையான மருத்துவக் கட்டமைப்பு ஏற்படுத்தாமல் மத்திய மாநில அரசுகளின் மெத்தனமாக செயல்பட்டதால் தலைநகர் முதல் வட இந்திய மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா நோயாளிகள் சிகிச்சையே கிடைக்காமல் உயிரை இழக்கும் அவலம் அவர்களது உற்றார் உறவினர் முன்பே நேர்கிறது.
இப்படியான இக்கட்டான சூழ்நிலையிலும் நம்பிக்கையை கைவிடாமல் நேர்மறையான எண்ணங்களோடும் மனிதத்தோடும் இருத்தல் அவசியம் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை தம்பதியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸுக்கான பிரதான சிகிச்சை மையமாக உள்ளது கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை. ஆனால் அங்கு முழுவதும் குளிரூப்பட்டவையாக இருப்பதால் மின் விசிறிகளின் பயன்பாடு அத்தியாவசியமாக உள்ளது.
ஆகவே,. இஎஸ்ஐ மருத்துவமனையின் முதல்வர், “கொரோனா காலத்தில் குளிர்சாதன வசதியை பயன்படுத்தக்கூடாது என்பதால் நோயாளிகள் காற்று இல்லாமல் சிரமப்படுகின்றனர். அரசு சார்பில் 300 மின் விசிறிகள் தரப்பட்டது.
ஆனால் மின்விசிறிகளின் தேவை இருப்பதால் விருப்பப்பட்டவர்கள் மின்விசிறி வழங்க முன்வரலாம். கொரோனா வைரஸ் காலகட்டம் முடிந்தவுடன் அவர்கள் மின்விசிறியை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவித்திருந்தார்.
இதனையறிந்த பெயர் வெளியிட விரும்பாத சாமானிய தம்பதி ஒருவர் தங்களது நகைகளை அடமானம் வைத்து 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் டெம்போ வாகனம் முழுவதும் 100 மின் விசிறிகளை வழங்கியுள்ளார்.
கடுமையான நிதி பற்றாக்குறையில் உள்ள அவர்களிடம் இருந்து முதலில் மின் விசிறிகளை வாங்க மறுத்த மருத்துவமனை முதல்வர், நூறில் சில மின் விசிறிகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறோம். எஞ்சியதை திரும்ப கொடுத்து உங்களது நகையை மீட்டுக் கொள்ளுங்கள் எனக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக முதல்வர் மாவட்ட ஆட்சியருக்கும் தெரிவித்திருக்கிறார். அவரும் உங்களுடைய சிரமங்களுக்கிடையே இவ்வளவு மின் விசிறிகள் தர வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் அவர்களை கூறியதை ஏற்க மறுத்த அத்தம்பதி கட்டாயம் இதனை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் உறுதியாக கூறியிருக்கிறார்கள்.
இதனையடுத்து மின் விசிறிகளை பெற்றுக் கொண்ட முதல்வர் ரவீந்திரன் இருவருக்கும் நன்றி கூறியதோடு ஊடகத்தின் முன்னிலையில் உங்களை கவுரவிப்பதாகவும் கூறினார். ஆனால் அத்தம்பதி எங்களை பற்றிய எந்த விவரமும் வெளியே தெரிய வேண்டாம் என பெருந்தன்மையுடன் மறுத்துவிட்டார்கள்.
ஏழை தம்பதியின் இந்த மனிதநேயமிக்க செயல் எத்தகைய பெருந்தொற்று வந்தாலும் மனிதம் வாழும் வரை அதனை முறியடிப்பதற்கான அத்தனை சாத்தியக் கூறுகளையும் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையை துளிரவிட்டிருக்கிறது.
மனிதம் போற்றி சமூக நீதியை கடைபிடித்து கொரோனா நோயாளிகளை குணமாக்க ஒன்றுபடுவோம்.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!