Tamilnadu

மீண்டும் ஊர் திரும்பும் படலம்: எப்போ டிக்கெட் கிடைக்கும் என சென்ட்ரலில் காத்திருக்கும் தொழிலாளர்கள்!

நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. எனவே, அதனை கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தொழிற்சாலைகள் இயக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் கடந்தாண்டைப் போல மீண்டும் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ஆயத்தமாகி வருகின்றனர்.

குறிப்பாக திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர்.

ஆனால் பயணச்சீட்டுக்கு முன்பதிவு செய்து, அது உறுதியான பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவதால், பயணச்சீட்டு கிடைக்காத பெரும்பாலான வெளிமாநில தொழிலாளர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வெளியே "எப்போது டிக்கெட் கிடைக்கும்" என்ற ஏக்கத்துடன் காத்திருக்கும் சூழல் உள்ளது.

Also Read: உருமாறிய கொரோனா; தீவிரமாக பரவும் 2வது அலையின் புதிய அறிகறிகள் இதோ! #CoronaCrisis