Tamilnadu

கட்டிய சில மாதங்களிலேயே இடிந்து விழுந்த தடுப்புச்சுவர்... கோவை ஸ்மார்ட் சிட்டி பணி முறைகேடுகளால் அவலம்!

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை மேம்படுத்தும் பணிகள், தெருக்களில் எல்.இ.டி பல்புகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக உக்கடம் பெரியகுளத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக உக்கடம் பெரியகுளம் கரை அருகே அசோக் நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 12 அடியில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. நேற்று நள்ளிரவு கோவையில் கனமழை பெய்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் அந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

அதிகாலை நேரம் என்பதால் சுற்றுச்சுவர் அருகே யாரும் இல்லாத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தடுப்புச்சுவர் கட்டப்பட்டு சில மாதங்களே ஆகும் நிலையில் இடிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தரமற்ற கட்டுமானப் பணிகளாலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும், ஏற்கனவே கட்டுமான பணிகள் தரமற்றவையாக இருப்பதாக மாநகராட்சி யில் புகார் அளித்துள்ளதாகவும் அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், கட்டப்பட்ட சில மாதங்களிலேயே சுவர் இடிந்து விழுந்துள்ளது அ.தி.மு.க அரசின் அவலத்தைப் பறைசாற்றுகிறது.

Also Read: "படுக்கை இல்லாமல் கதறும் நோயாளிகள்” - மாநில பேரிடர் நிதியை பயன்படுத்த விடாமல் அலைக்கழிக்கும் பா.ஜ.க அரசு!